Homeசெய்திகள்சினிமாநாளை தியேட்டரில் வெளியாகும் படங்கள் எதெல்லாம்னு தெரிஞ்சுக்கோங்க!

நாளை தியேட்டரில் வெளியாகும் படங்கள் எதெல்லாம்னு தெரிஞ்சுக்கோங்க!

-

பார்க்கிங்

நாளை தியேட்டரில் வெளியாகும் படங்கள் எதெல்லாம்னு தெரிஞ்சுக்கோங்க!!ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ஹிந்துஜா, எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இதற்கு இசையமைத்துள்ளார். ஜூ ஜூ சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர் ஒன்றை பார்க்கிங் செய்வதனால் ஏற்படும் ஈகோ கிளாஸ் சம்பந்தமான கதைகளத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அன்னபூரணிநாளை தியேட்டரில் வெளியாகும் படங்கள் எதெல்லாம்னு தெரிஞ்சுக்கோங்க!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த 2013இல் வெளியான ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அன்னபூரணி திரைப்படத்தை ட்ரிடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். பிராமண குடும்பத்தில் பிறந்த நயன்தாரா சமையல் கலைஞராக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவராக இருக்கிறார். அதன் பின் பல தடைகளை தாண்டி எப்படி தன் லட்சியத்தை அடைகிறார் என்பது சம்பந்தமான கதைகளத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அனிமல்நாளை தியேட்டரில் வெளியாகும் படங்கள் எதெல்லாம்னு தெரிஞ்சுக்கோங்க!

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ள திரைப்படம் தான் அனிமல். இந்த படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் படத்தின் வெறித்தனமான ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ஆக்சன் காட்சிகளுடன் கலந்த எமோஷனல் கதைக்களத்தில் தயாராகியுள்ள அனிமல் திரைப்படம் நாளை திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

நாடுநாளை தியேட்டரில் வெளியாகும் படங்கள் எதெல்லாம்னு தெரிஞ்சுக்கோங்க!

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெய், அனன்யா, அஞ்சலி, சர்வானந்த் ஆகியோரின் நடிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் இயக்குனர் எம் சரவணன் இயக்கியுள்ள திரைப்படம் தான் நாடு. இந்த படத்தில் தர்ஷன் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

வா வரலாம் வாநாளை தியேட்டரில் வெளியாகும் படங்கள் எதெல்லாம்னு தெரிஞ்சுக்கோங்க!

வா வரலாம் வா படத்தை இயக்குனர் கெளதமன் இயக்கியுள்ளார். இதில் பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இவருடன் மஹானா சஞ்சீவி, மைன் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

MUST READ