Homeசெய்திகள்சினிமாஅஜித்தை இயக்கப் போகும் வெற்றிமாறன்...! உச்சகட்ட சர்ப்ரைஸ்

அஜித்தை இயக்கப் போகும் வெற்றிமாறன்…! உச்சகட்ட சர்ப்ரைஸ்

-

- Advertisement -

அஜித்தை இயக்கப் போகும் வெற்றிமாறன்...! உச்சகட்ட சர்ப்ரைஸ்தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். சமூக வலைத்தளங்கள், ரசிகர் மன்றங்கள் என எதுவுமே வேண்டாம் என்று விலகி இருந்தும் ரசிகர்கள் இவர் மீது கொண்ட அன்பு குறைந்தபாடில்லை. இவருடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா ப்ரோமோசன்ஸ் எதுவும் இல்லை என்றாலும் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கும். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமைந்தது. எச் வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம், வங்கிகள் மக்களை எப்படி சுரண்டுகின்றன என்பதை வெளிச்சம் போட்டு காட்டி மக்களின் ஆதரவை பெற்றது. இதையடுத்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் விக்னேஷ் சிவன் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. பின்னர் சில காரணங்களால் இந்த கூட்டணி இணையாமல் போக அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் இயக்குனர் மகிழ் திருமேனி. “விடாமுயற்சி” என பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி உள்ளன. அவர் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் (AK63) ஒன்றில் நடிக்க உள்ளார். அதற்கு அடுத்ததாக இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் (AK 64 ) படத்தில் நடிக்க உள்ளார் என செய்திகள் கசிந்துள்ளன. விடுதலை பாகம் 1 படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். அஜித்தை இயக்கப் போகும் வெற்றிமாறன்...! உச்சகட்ட சர்ப்ரைஸ்விடுதலை 2 அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் வாடிவாசல் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படங்களுக்கு பின்னர் அஜித் வெற்றிமாறன் கூட்டணி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு வித்தியாசமான கூட்டணியில் உருவாகும் இப்படத்தை ஆர் எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அஜித், வெற்றிமாறன் கூட்டணி எத்தகைய கதையை கையில் எடுப்பர் என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எளிய மக்களின் வாழ்வியலை யதார்த்தம் மீறாமல் காட்டும் வெற்றிமாறன் நடிகர் அஜித்திற்கு எத்தகைய கதாபாத்திரத்தை வடிவமைக்க உள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

MUST READ