தமிழ் சினிமாவில் நடிகர் அசோக் செல்வன் நல்ல வரவேற்பைப் பெறும் படங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்து வருகிறார். ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் தெகிடி, கூட்டத்தில் ஒருவன், ‘ஓ மை கடவுளே‘ ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார்.
கடைசியாக அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. சரத்குமார் மற்றும் அசோக்செல்வன் நடிப்பில் உருவான போர் தொழில் திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியானது. அப்பளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதனிடையே, சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் சபாநாயகன். மேகா ஆகாஷ், கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சாந்தினி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது படக்குழு புதிய பாடல் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி, வரும் டிசம்பர் 15-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ல ப்ளூ ஸ்டார் படமும் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சபாநாயகன் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகிறது. இசை அமைப்பாளர் அனிருத் இதை வெளியிடுவதாக அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.