தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வரும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். அதேசமயம் இவர் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் டார்லிங், பென்சில் போன்ற 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் அடியே என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் டியர், கிங்ஸ்டன் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் ரிபெல் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை புது முக இயக்குனர் நிகேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் சி வி குமார் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் தான் இந்த ரிபெல் படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரிபெல் படத்தின் படப்பிடிப்புகள்
கடந்த 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் நிறைவடைந்ததாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. இந்த படம் ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ளது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி கவனம் ஈர்ததும். இந்த படத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து மமிதா பைஜூ, கருணாஸ், கல்லூரி வினோத், சுப்பிரமணிய சிவா, வி.பி. வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
This #AzhaganaSathigari from #Rebel, will make you VIBE ✨😇#RebelFirstSingle OUT NOW 🔗 https://t.co/Ft8uuckkwb
🎵@gvprakash
🎙️@velmurugan_off@StudioGreen2 @GnanavelrajaKe @NikeshRs #MamithaBaiju @arunkrishna_21 @vetrekrishnan @stuntsaravanan @yuvrajganesan @NehaGnanavel… pic.twitter.com/rCRvEJvoGV— G.V.Prakash Kumar (@gvprakash) December 1, 2023
தற்போது ரிபெல் படத்தின் அழகான சதிகாரி எனும் முதல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜிவி பிரகாஷின் இசையில் வெளியான பல பாடல்களில் இந்த பாடலும் முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.