Homeசெய்திகள்சினிமாதெலுங்கில் ரீமேக் ஆகும் சூர்யாவின் பிளாக்பஸ்டர் படம்... தயாரிக்கப் போகும் டாப் நிறுவனம்!

தெலுங்கில் ரீமேக் ஆகும் சூர்யாவின் பிளாக்பஸ்டர் படம்… தயாரிக்கப் போகும் டாப் நிறுவனம்!

-

தெலுங்கில் ரீமேக் ஆகும் சூர்யாவின் பிளாக்பஸ்டர் படம்... தயாரிக்கப் போகும் டாப் நிறுவனம்!கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில், மறைந்த இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அயன். சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட்டான டாப் 100 திரைப்படங்களின் லிஸ்ட் எடுத்தால் நிச்சயமாக அதில் அயன் படம் இடம்பெற்றிருக்கும். அந்த அளவுக்கு ஒரு தரமான படமாக பாக்ஸ் ஆபிஸிலும் சம்பவத்தை செய்து இருந்தது அயன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்திருந்தன. ஹாரிஸ் ஜெயராஜின் பெஸ்ட் பிலிம்ஸ் பிரிவிலும் அயன் திரைப்படம் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய கே வி ஆனந்த் உலகின் பல்வேறு மூலைகளுக்கு பறந்து அயன் படத்தை எடுத்து முடித்தார். இதுவரை எந்த படத்திலும் பார்த்திடாத துறுதுறுவென இருக்கும் சூர்யா, அனல் பறக்கும் சண்டை காட்சிகள், பின்னி எடுக்கும் பின்னணி இசை என திரை வழியே மாபெரும் விருந்தே படைத்திருந்தனர். தெலுங்கில் ரீமேக் ஆகும் சூர்யாவின் பிளாக்பஸ்டர் படம்... தயாரிக்கப் போகும் டாப் நிறுவனம்!படத்தின் தரத்தில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஏ.வி.எம் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி நிலையில் இருந்து வந்த தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படத்தையும் தயாரிப்பில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் 15 வருடங்களுக்குப் பிறகு தற்போது தெலுங்கில் அயன் படத்தின் ரீமேக்கை தயாரிக்க உள்ளது. தெலுங்கிலும் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் இருந்து வந்த நிலையில் அயன் படம் வெளியான போதே தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டு நல்ல வசூலும் பார்த்தது. தெலுங்கில் ரீமேக் ஆகும் சூர்யாவின் பிளாக்பஸ்டர் படம்... தயாரிக்கப் போகும் டாப் நிறுவனம்!தற்போது ரீமேக் செய்து வெளியிட இருப்பதால் ஒரு முழுமையான தெலுங்கு படமாக இப்படம் தயாராக உள்ளது. மேலும் இப்படத்தினை இயக்கப் போவது யார், நாயகன் நாயகிகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்கால சினிமா ரசிகர்களுக்கு ஏற்றபடி கதையில் சில மாறுதல்களும் இருக்க வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.

MUST READ