Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்!

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்!

-

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்!உலகநாயகன் கமல்ஹாசனின் 234 வது படமாக உருவாக உள்ள “தக் லைஃப்” (Thug Life) படத்தினை மணிரத்தினம் இயக்க உள்ளார். 1987-ல் வெளியான நாயகன் படத்திற்கு பிறகு 36 வருடங்கள் கழித்து மணிரத்தினம் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பணியாற்ற உள்ளனர். நாயகன் திரைப்படம் இந்திய அளவில் சிறந்த படங்களில் முக்கியமான இடத்தை தக்க வைத்துள்ள படம் என்பதால் தக் லைப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்!மேலும் இவர்கள் இணைந்தாலே இசையில் புதுமை மலரும் என்பது போன்ற ஒரு காம்பினேஷன்தான் மணிரத்தினம், ஏ ஆர் ரகுமான் காம்பினேஷன். அந்த வகையில் தக் லைஃப் படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். படத்திற்கான அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. மல்டி ஸ்டாரர் படமான இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, போன்ற நடிகர்கள் நடிக்கின்றனர் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் விருமாண்டி படத்திற்கு பிறகு நடிகை அபிராமியும் கமலுடன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்! இந்நிலையில் தான் தற்போது இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. மணிரத்தினம் இயக்கத்தில் கடல் படம் தான் கௌதம் கார்த்திக் அறிமுகமான முதல் படம். தற்போது மீண்டும் கௌதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகவில்லை படத்தின் படப்பிடிப்புகள் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளன.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருள் செலவில் இப்படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ