Homeசெய்திகள்சினிமாஅன்னம் பரிமாறிய அன்னபூரணி... மாணவிகளுடன் நயன் கொண்டாட்டம்...

அன்னம் பரிமாறிய அன்னபூரணி… மாணவிகளுடன் நயன் கொண்டாட்டம்…

-

அன்னபூரணி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, நடிகை நயன்தாரா தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பிரியாணி பரிமாறி குதூகலித்தார்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். இதைத் தொடர்ந்து ஜெயம்ரவிக்கு ஜோடியாக இறைவன் படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் கதாநாயகியை மையமாகக் கொண்ட அன்னபூரணி படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து ஜெய் மற்றும் சத்யராஜ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜா ராணி படத்திற்கு பிறகு சத்யராஜும், ஜெய்யும் இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், அன்னபூரணி திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அன்னபூரணி திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி விமர்சனம் ரீதியாவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பிரியாணி பரிமாறி மகிழ்ந்துள்ளார் நயன்தாரா. அவர் மட்டுமன்றி ஜெய்யும் கலந்து கொண்டு மாணவிகளுக்கு உணவு பரிமாறி, கலந்துரையாடினர்.

MUST READ