Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா செய்வது எப்படி?

மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா செய்வது எப்படி?

-

மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா செய்வது எப்படி?மதுரையில் பேமஸ் ஆக இருப்பது மல்லிப்பூ மட்டுமில்லை. இந்த ஜிகர்தண்டாவும் பேமஸ் தான். இதை விரும்பாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். தற்போது மதுரையில் கிடைக்கும் அதே சுவையில் ஜிகர்தண்டா செய்து பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருள்கள்
பால் – 2 லிட்டர்
சர்க்கரை – 4 கப்
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பிசின் – 1 கப்

செய்முறை:

ஜிகர்தண்டா செய்வதற்கு முதலில் பாதாம் பிசினை 2 கப் தண்ணீர் ஊற்றி எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் ஒரு அகன்ற பாத்திரத்தில் சர்க்கரை முழுவதையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்ய வேண்டும். சர்க்கரை பாகு கருகி விடாமல் பார்த்து, இறக்கி விட வேண்டும்.

இப்போது இன்னொரு அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி அதனை நன்கு காய்ச்ச வேண்டும். பால் கெட்டியாகும் வரை காய்ச்ச வேண்டும். அதேசமயம் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பால் கொதித்து பத்து நிமிடங்கள் கழித்து சர்க்கரைப்பாகில் பாதி அளவினை ஊற்ற வேண்டும்.

பின் பால் ஓரளவிற்கு வற்றி ஐஸ்கிரீம் போன்று வருவதற்கு முந்தைய நேரத்தில் சோள மாவினை சிறிது தண்ணீரில் கலந்து ஊற்றி கிளறி விட வேண்டும். சோள மாவு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா செய்வது எப்படி?

பின் மறுபக்கம் மற்றொரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு லிட்டர் பாலினை சேர்த்து கொதிக்க விட வேண்டும். மிதமான தீயில் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

அதன்பின் மீதமுள்ள சர்க்கரைப்பாகினை சேர்த்து நன்கு கலந்த பின் அடுப்பினை அணைத்துவிட வேண்டும். இப்போது காய்ச்சிய பாலை குளிர வைக்க வேண்டும். ஏற்கனவே செய்து வைத்த ஐஸ்கிரீம் ஆறி வந்தவுடன் அதனை ஒரு டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்க வேண்டும்.

இரண்டு மணி நேரங்கள் கழித்து திரும்பவும் அந்த ஐஸ்கிரீமை எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். நன்கு அரைத்து மீண்டும் அந்த டப்பாவில் சேர்த்து ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

இப்போது இன்னொரு பாத்திரத்தில் குளிர வைத்துள்ள பாலுடன் ஊற வைத்துள்ள பாதாம் பிசினை சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

அதன்பின் 8 மணி நேரங்கள் கழித்து ஒரு டம்ளரில் பாதாம் பிசின் சேர்த்த பாலினை ஊற்றி அதன் மேல் டப்பாவில் அடைத்து வைத்துள்ள ஐஸ்கிரீமை எடுத்து வைத்து பரிமாற வேண்டும். (தேவைப்பட்டால் கூடுதல் சுவைக்காக நன்னாரி சிரப் பயன்படுத்திக் கொள்ளலாம்)

இப்போது சுவையான மதுரை பேமஸ் ஜிகர்தண்டா ரெடி.

MUST READ