Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை தொடரும்.... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

-

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை தொடரும்.... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 5.30 மணிக்கு வலுப்பெற்ற நிலையில், அதற்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே வானிலை மையம் எச்சரித்தபடி மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை தொடரும்.... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு வட கிழக்கில் கிட்டதட்ட 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ள நிலையில், இந்த புயல் தொடர்ந்து வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தீவிரமான புயலாக மாறக்கூடும். எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆதலால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும் அவசியம் இல்லாமல் வெளியில் வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

MUST READ