
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ., பூந்தமல்லியில் 34 செ.மீ., ஆவடியில் 28 செ.மீ. மழையும், காட்டுப்பாக்கத்தில் 27 செ.மீ., தாம்பரம் 24 செ.மீ., மகாபலிபுரம், ஐஸ் ஹவுஸில் 22 செ.மீ. மழையும் பதிவானது.
“இம்முறை ஏற்பட்டது இயற்கை வெள்ளம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. சென்னையில் வழக்கம் போல் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக பெட்ரோல், டீசல் விநியோகிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. விநியோகம் தடைப்படவில்லை என்ற போதும், பெட்ரோல் பங்க்குகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக உள்ளது.
“மின்விநியோகம் சீராகிறது”- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!
இதனிடையே, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்து, குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் வெளியேற வழியின்றி குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.