
சென்னை மேற்கு தாம்பரத்தில் கன்னடபாளையம் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் மழை, வெள்ளம் சூழந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் 5,060 கோடி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணி இரவு, பகல் பாராமல் தொடர்கிறது. பேரிடர் மீட்புக் குழுவினர், குழுவிற்கு 25 பேர் வீதம், 19 குழுக்களாகப் பிரிந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
வட சென்னையில் வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்டப் பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றப்படாமல் உள்ளதால் மக்கள் பெரும் சிரமமடைந்தனர்.
வீடுகளில் தேங்கியுள்ள மழைநீருடன் கழிவுநீரும் கலந்து உள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சென்னையை அடுத்த ஒக்கியம் துரைப்பக்கத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் பல்லவன் குடியிருப்பில் உள்ள மக்கள் அவதியடைந்துள்ளனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு!
இதனிடையே, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னையில் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிலம்பாக்கம்- துரைப்பாக்கம் வரை ரேடியால் சாலை, வேளச்சேரி- பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை- தாம்பரம் சாலை, மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் சாலை உள்ளிட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.