Homeசெய்திகள்சினிமாஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்... ஆஃபரை அறிவித்த விதார்த் பட இயக்குனர்!

ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்… ஆஃபரை அறிவித்த விதார்த் பட இயக்குனர்!

-

ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்... ஆஃபரை அறிவித்த விதார்த் பட இயக்குனர்!தமிழ் சினிமாவின் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த “மைனா” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டார் நடிகர் விதார்த். பின்னர் வீரம் திரைப்படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து கண்மூடித்தனமாக படங்களை நடிக்காமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை,பயணிகள் கவனிக்கவும், இறுகப்பற்று,குய்கோ, போன்ற படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. மாஸ் மசாலா கதை வட்டத்துக்குள் அடைபடாமல் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளுக்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பவர் நடிகர் விதார்த். பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது மட்டும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும் நிலைதான் இதுவரை இருந்து வருகிறது. நல்ல தரமான பல படங்கள்,சிறிய பட்ஜெட் படங்கள் என்பதால் திரையரங்குகளில் அந்த அளவுக்கு கூட்டத்தை எதிர்பார்க்க முடிவதில்லை. சிறிய படங்கள் ரிலீசான பின்பு நல்ல விமர்சனங்களை பெறுவதன் மூலமே ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுக்கின்றன. சினிமா என்பது வெறுமனே கலை என்பது மட்டும் இல்லாமல் ஒரு வியாபாரம். ஒரு படத்தின் விமர்சன ரீதியான வெற்றி மட்டுமின்றி வசூல் ரீதியிலும் லாபத்தை கொடுக்கும் படம் தான் தயாரிப்பாளருக்கு சினிமா கலையை வளர்த்தெடுக்க ஊக்குவிப்பாக மாறும். அந்த தயாரிப்பாளரும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுவார். இருப்பினும் தற்போதைய காலகட்டத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியான பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற பரவலான மனப்பான்மை மக்களிடையே நிலவுவதை காண முடிகிறது.ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்... ஆஃபரை அறிவித்த விதார்த் பட இயக்குனர்! எனவே படத்தின் முதல் நாள் ரிலீஸ் அன்று பார்வையாளர்களை திரையரங்குக்கு வர வைக்க ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளனர் விதார்த் நடிப்பில் உருவாகும் “ஆயிரம் பொற்காசுகள்” படத்தின் படக்குழுவினர். படத்தின் இயக்குனரான ரவி முருகையா இத்தகவலை வெளியிட்டுள்ளார். இப்படத்தில் விதார்த், அருந்ததி நாயர், ஜார்ஜ் மரியான், சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜோகன் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை திரையரங்கிற்குள் வர வைப்பதற்காகவே இந்த புதிய யுக்தியை படக் குழுவினர் கையாளுகின்றனர். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் படம் வெளியாக இருக்கிறது.
.

MUST READ