மிக்ஜாம் புயலினால் சென்னை வாழ் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் தமிழக அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதே சமயம் பல சமூக ஆர்வலர்களும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். ஆனாலும் தற்போது வரை பல மக்கள் தாங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளதாகவும் தங்களை காப்பாற்ற வேண்டும் வாருங்கள் எனவும் சமூக வலைதளங்களில் உதவி கேட்டு வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பகுதிகளில் இருந்து திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், காவல்துறையினர் ஆகியோர் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் இருக்கும் நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்து துரைப்பாக்கத்தில் உள்ள எர்டிக் வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு நடிகை நமிதா, அவரது கணவர் மற்றும் செல்லப்பிராணிகள் வசித்து வந்த நிலையில் அவர்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்கள். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் நமிதா மற்றும் அவரின் கணவரை அவர்களின் இரட்டை குழந்தைகளுடன் பத்திரமாக வைத்துள்ளனர். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நமிதா, “இரண்டு நாட்கள் திமுக வட்ட செயலாளர் தான் எங்களுக்கு உணவு வழங்கி வந்தார். அவருக்கும் இனிப்பு படை குழுவினருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளனர்.