Homeசெய்திகள்சினிமாஅடித்து நொறுக்கும் 'அனிமல்'...... மிருகத்தனமான வசூல் வேட்டை!

அடித்து நொறுக்கும் ‘அனிமல்’…… மிருகத்தனமான வசூல் வேட்டை!

-

- Advertisement -

அடித்து நொறுக்கும் 'அனிமல்'...... மிருகத்தனமான வசூல் வேட்டை!ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அனிமல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி வருகிறது. அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தையும் இயக்கியிருந்தார். அர்ஜுன் ரெட்டி படத்தைப் போலவே ரொம்ப ராவான படமாகவே இப்படமும் அமைந்திருந்தது. படம் முழுக்கவே ஏகத்துக்கும் வன்முறை காட்சிகளும் ஆபாச காட்சிகளும் நிறைந்து இருந்ததாக பல திரைவிமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இருப்பினும் பாலிவுட் ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக படத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது. படத்தில் பெண்களை இழிவு படுத்தி இருப்பதாகவும் ஆண்களை வக்கிரபுத்தி காரர்களாகவும் காட்டியிருப்பதாக கூறி தென்னிந்திய பகுதிகளில் இப்படத்துடன் கருத்து வேறுபாடு இருந்ததால் படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று வந்தது. மேலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா பகுதிகளில் மிக்ஜம் புயல் பாதிப்பு ஏற்பட்டதாலும் கடந்த ஒரு வார காலமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதாலும் படத்தின் வசூல் சற்று பின்னடைந்திருந்தது.அடித்து நொறுக்கும் 'அனிமல்'...... மிருகத்தனமான வசூல் வேட்டை! ஆனால் வட இந்திய பகுதிகளில் படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. ரிலீஸ் ஆன முதல் வாரத்திலேயே 481 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது அனிமல் படம். சமீபத்தில் வெளியான பாலிவுட் படங்களான பதான், ஜவான் போன்ற படங்கள் ஆயிரம் கோடியை வசூலித்துள்ளன. இந்நிலையில் அனிமல் திரைப்படமும் ஆயிரம் கோடியை வசூலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ