Homeசெய்திகள்சினிமாஇன்றைய ஓடிடி கார்னர்.... நட்சத்திர பட்டாளங்களின் திரைப்படங்கள் ரிலீஸ்...

இன்றைய ஓடிடி கார்னர்…. நட்சத்திர பட்டாளங்களின் திரைப்படங்கள் ரிலீஸ்…

-

- Advertisement -

இன்றைய ஓடிடி கார்னர் பக்கத்தில் இரு பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளன.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியாகி கோலிவுட்டில் முக்கிய இடத்தை பிடித்த திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமன்றி வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்காக பாபி சிம்ஹா, தேசிய விருதையும் பெற்றார்.ஜிகர்தண்டா முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளி பண்டியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. தற்போது இத்திரைப்படம் பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

அடுத்த திரைப்படம் தி ஆர்ச்சீஸ். பாலிவுட்டில் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகள் நடித்துள்ள திரைப்படம் தி ஆர்ச்சீஸ். ஜோயா அக்தர் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். விண்டேஜ் காலகட்ட கதையாக இது உருவாகி இருக்கிறது. அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா , ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் குஷி கபூர் இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளனர்.
இதில் மிஹிர் அஹுஜா, வேதாங் ரெய்னா, யுவராஜ் மெண்டா மற்றும் அதிதி சைகல் ஆகியோரும் நடித்துள்ளனர். பாலிவுட் திரையுலகில் இது முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக இப்படத்தின் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் பாலிவுட் பிரம்மாண்ட நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பலரும் பங்கேற்றனர். இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது

MUST READ