Homeசெய்திகள்சினிமாகண்ணகி படத்திலிருந்து புதிய பாடல் வெளியானது

கண்ணகி படத்திலிருந்து புதிய பாடல் வெளியானது

-

- Advertisement -

அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள கண்ணகி படத்திலிருந்து புதிய பாடல் வௌியாகி உள்ளது.

நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமானவர் கீர்த்தி பாண்டியன். தமிழில் தும்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். படத்தில் அவருடன் தர்ஷன் இணைந்து நடித்திருப்பார். இப்படத்தைத் தொர்ந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் அவரும், அவரது தந்தை அருண் பாண்டியனும் நடித்திருந்தனர். இதனிடையே, பிரபல நடிகர் அசோக் செல்வனை திருமணம் முடித்தார். 10 ஆண்டுகளாக காதலித்து வந்த அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இதையடுத்து, கீர்த்தி பாண்யிடன் கண்ணகி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி பாண்டியனுடன் அம்மு அபிரதாமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, ஆகியோரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். நான்கு பெண்கள், நான்கு சூழ்நிலைகள் என கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்க மூன், இ5 நிறுவனங்கள் இணைந்து கண்ணகி படத்தை வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி இருக்கிறது. வரும் டிசம்பர் 15-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில் அசோக் செல்வனின் சபா நாயகன் திரைப்படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

MUST READ