Homeசெய்திகள்சினிமாசூர்யாவின் 'கங்குவா'- வில் நடிப்பதை உறுதி செய்த....'அனிமல்' பட வில்லன்!

சூர்யாவின் ‘கங்குவா’- வில் நடிப்பதை உறுதி செய்த….’அனிமல்’ பட வில்லன்!

-

- Advertisement -

சூர்யாவின் 'கங்குவா'- வில் நடிப்பதை உறுதி செய்த....'அனிமல்' பட வில்லன்!சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. நிகழ்காலம் மற்றும் வரலாற்று காலங்களை அடிப்படையாக வைத்து ஒரு பீரியட் ஆக்சன் படமாக இப்படம் உருவாகி வருகிறது. 3D தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இதுவரை சூர்யா நடித்ததிலேயே மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் திரைப்படமும் இதுதான். இப்படத்திற்காக பிரத்தியேகமாக வித்தியாசமான பல ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி உள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. படத்தில் சூர்யா, திஷா பதானி, கோவை சரளா, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர் என்று கூறப்பட்டு வந்த நிலையில் படத்தில் மெயின் வில்லனாக யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. இந்நிலையில் இப்படத்தில் மெயின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார் என்ற தகவலும் கசிந்தது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் இந்த செய்தியை தொலைக்காட்சி இன்டர்வியூ ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் பாபி தியோல். மேலும் கங்குவா பற்றி தன் கருத்தையும் பகிர்ந்துள்ளார்.சூர்யாவின் 'கங்குவா'- வில் நடிப்பதை உறுதி செய்த....'அனிமல்' பட வில்லன்! “கங்குவா பட குழுவினர் மிகச் சிறந்த திறமைசாலிகள். நடிகர் சூர்யா திறமையான மற்றும் அர்ப்பணிப்பான நடிகர்.அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. கங்குவா படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமானது மேலும் நான் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளேன். எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு தமிழ் மொழியே தெரியாது இருப்பினும் நான் தமிழ் பேசி நடித்துள்ளேன்” என்றும் கூறியுள்ளார். பாபி தியோல் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படத்தில் வாய் பேச முடியாத வில்லனாக தோன்றி மிரட்டி இருந்தார். அனிமல் படத்தில் இவருடைய காட்சிகள் 10 நிமிடங்கள் என்ற அளவே இருந்தன. அதிலும் ஸ்கோர் செய்திருந்தார் பாபி. தற்போது கங்குவா படத்தில் எத்தகைய வில்லன் கதாபாத்திரமாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் கங்குவா படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது ராணா டகுபதி தான், பின்னர் ராணா 18 கோடி சம்பளம் கேட்டதாகவும் பாபி தியோல் 13 கோடி சம்பளம் கேட்டதாகவும், இதனால்தான் படத்தில் பாபி வில்லனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் எனவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ