கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்ட தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்க்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 560 குறைவு!
பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரசேகர ராவ், பண்ணை வீட்டில் இருந்த போது, தடுமாறி விழுந்து இடுப்பு பகுதியில் பலமாக அடிப்பட்டது. இதையடுத்து, அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இடது பக்க எலும்பில் முறிவு ஏற்பட்டது பரிசோதனையில் தெரிய வந்தது. அறுவைச் சிகிச்சைகளுக்கு பிறகு சந்திரசேகர ராவ், இயல்பு நிலைக்கு திரும்ப ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு துறை மருத்துவர்கள் கொண்ட குழு கே.சி.ஆரின் உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் சேமிப்புக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!
அண்மையில் நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியை இழந்தது. இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சில நாட்களிலேயே சந்திரசேகர ராவ்க்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.