Homeசெய்திகள்அரசியல்தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டி

தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டி

-

- Advertisement -

தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செய்ல்பட்டுள்ளது-விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி

தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டி

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி
மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் மு.பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம்பி:

மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விசிக சார்பில் ரூபாய் 10 லட்சம் வழங்கியுள்ளோம்.கன மழையிலும் அரசு அதிகாரிகள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர், அதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.நிவாரண பணிகளுக்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒன்றிய அரசிற்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். ஆனால் எப்போதும் போல தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கியுள்ளது.

முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருமே உடனடியாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வேண்டிய பணிகளை செய்து வருகின்றனர்.மீட்பு பணிகள் சிறப்பாக இருந்து வருகிறது என்றாலும் கூட 47 வருடங்களுக்கு பிறகு பெய்த கனமழை காரணமாக வெகுவான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அரசு தன்னுடைய சக்திக்கேற்ப மீட்பு பணிகளை செய்து வருகிறது என்பதை நாம் அறிவோம்.

கனமழையால் வேளச்சேரி கட்டிட விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம், அவரது முயற்சியால் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கு 26 கட்சிகளின் கூட்டணியோடு இந்தியா கூட்டணி உருவாகி உள்ளது. அவரது எண்ணம் ஈடேறும் வகையில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வகையில் அவர் உரிய வழிகாட்டுதலை தந்து கொண்டிருக்கிறார்.

கர்நாடகா ஆந்திராவை தொடர்ந்து 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டுவோம். அத்தகைய வெற்றியை காணும் வகையில் சோனியா காந்தி அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வாழ்த்துகிறது.

மஹுவா மொய்த்ரா கடந்த காலங்களில் மக்களவையில் மோடி அரசு அல்ல அதானி சர்க்கார் என்று தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார், பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையிலான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தினார் அதனால் ஆத்திரமுற்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி அவர் மீது விசாரணை நடத்தி முடிவெடுத்தோம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகளே பங்கேற்காத விசாரணை குழுவில் ஒரு சார்பாக செயல்பட்டு அவரது பதவியை பரித்துள்ளார்கள். இது மோசமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினரின் பதவியை தங்களின் அரசியல் காரணங்களுக்காக பறிப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகும், விசிக இதனை வன்மையாக கண்டிக்கிறது

டிசம்பர் 23ஆம் தேதி விசிக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வெல்லும் ஜனநாயகம் மாநாடு டிசம்பர் 29ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கூட்டணி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, டி ராஜா, திபங்கர் பட்டாச்சாரியா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு திருச்சி சிறுகனூரில் நடைபெறும் என்று கூறினார்.

MUST READ