Homeசெய்திகள்சினிமாகன்னட நடிகை லீலாவதி மரணம்... பிரதமர் மோடி இரங்கல்....

கன்னட நடிகை லீலாவதி மரணம்… பிரதமர் மோடி இரங்கல்….

-

பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி ஆவார். தட்சின கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் பிறந்து வளர்ந்த அவர், கன்னடம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். சுமார் 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் லீலாவதி நடித்து இருக்கிறஆர். தமிழில் பட்டினத்தார், சுமைதாங்கி, அவள் ஒரு தொடர் கதை, அவர்கள், நான் அவனில்லை, வளர்பிறை, புதிர், கர்ஜனை ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். அவள் ஒரு தொடர் கதையில் நடிகர் கமலுடன் நடித்திருந்தார். கர்ஜனை படத்தில் ரஜினியுடனும், வளர்பிறையில் சிவாஜியுடனும் நடித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை லீலாவதி மரணம்.... சோகத்தில் திரை உலகினர்!

இதனிடையே, பழம்பெரும் நடிகை லீலாவதி பெங்களூரு அருகே சோழதேவனஹள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்ட அவர், கடந்த சில நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தார். அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கன்னட நடிகை லீலாவதி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், லீலாவதியின் மரணச் செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். சினிமாவின் உண்மையான அடையாளமான அவர், பல படங்களில் தனது நடிப்பால் வெள்ளித்திரையை அலங்கரித்தார். அவரது மாறுபட்ட கதாபாத்திரங்கள் எப்போதும் பாராட்டப்படும், என குறிப்பிட்டிருந்தார்.

MUST READ