Homeசெய்திகள்சென்னைமழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!

மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!

-

சென்னை கொரட்டூரில் உள்ள இ எஸ் ஐ மருத்துவமனையில் உள்ள மருந்துகள் வெள்ள நீரில் மூழ்கி வீணாகி உள்ளன.

சென்னை கொரட்டூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் முழுவதுமாக தண்ணீர் தேங்கியதால் அதனை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கடந்த நான்கு நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்ட நிலையில் தற்போது தண்ணீர் முழுவதுமாக வடிந்து மருந்து விநியோகம் தொடங்கியுள்ளது.  தற்பொழுது மருத்துவமனைக்கு தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் வருகை தந்துள்ளனர்.

மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!

அப்போது தேங்கி இருந்த மழைநீர்ல் மூழ்கி தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்துகள்   மூட்டை மூட்டையாக வீணாகி இருப்பதும் காட்சிகள் தற்பொழுது பதிவாகியுள்ளது.

மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!

கொரட்டூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருப்பு வைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய பல லட்சம் ரூபாய் அளவிற்கு மருந்துகள் வீணாகி உள்ள நிலையில் வழக்கமான தேவை உள்ள மருந்துகளை உடனடியாக இருப்பு வைக்க வேண்டும் மற்றும் உடனடியாக தேவையான மருந்து மாத்திரைகளை இஎஸ்ஐ நிர்வாகம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!

 

MUST READ