Homeசெய்திகள்சினிமாமனப்பதற்றம் பிரச்சனையை அனுபவித்து வரும் கரண் ஜோகர்

மனப்பதற்றம் பிரச்சனையை அனுபவித்து வரும் கரண் ஜோகர்

-

மனப்பதற்றம் காரணமாக பாதிப்பட்டுள்ள கரண் ஜோகர், சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரை உலகில் முக்கிய இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கரண் ஜோகர். காஃபி வித் கரண் என்ற தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சியை நடத்தி மிகவும் பிரபலம் ஆனவர. பாலிவுட் பிரபலங்கள் பங்குபெற்று மனம் திறந்து பேசுவது தான் இந்த நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர் நடிகையும், கணவன் மனைவியுமா ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் இணைந்து வந்த பேசியது பெரும் சர்ச்சையானது.

இந்நிகழ்ச்சியில், கடந்த ஏப்பல் மாதம் நீட்டா முகேஷ் அம்பானி கலாசார மைய நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தனக்கு மனப்பதற்றம் ஏற்பட்டதாக கரண் ஜோகர் தெரிவித்திருந்தார். முகம் எல்லாம் வியர்த்து உணர்வில்லாமல் இருந்தேன், நடிகர் வருண் தவான் தான் நலமா என தன்னை தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார் என குறிப்பிட்டார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, நான் 2016-ம் ஆண்டு முதலே மனப்பதற்றத்தை அனுபவித்து வருகிறேன். இந்த வருடமும் பிரச்னையை எதிர்கொண்டேன். இதற்காக நான் சிகிச்சை எடுத்து, மருந்து சாப்பிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

MUST READ