Homeசெய்திகள்சினிமாசலார் படத்திற்காக 5 மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்.... நெகிழ்ச்சி பதிவு!

சலார் படத்திற்காக 5 மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்…. நெகிழ்ச்சி பதிவு!

-

சலார் படத்திற்காக 5 மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்.... நெகிழ்ச்சி பதிவு!மலையாள ஸ்டார் நடிகர்களின் ஒருவரான பிரித்விராஜ், ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனர் என்பதை லூசிபர் படத்தின் மூலம் நிரூபித்தார். மோகன்லால் நடிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் எம்புரான் திரைப்படத்தை பிரித்திவிராஜ் இயக்கி வருகிறார். அதேசமயம் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதற்கிடையில் பிரசாந்த் நீல் இயக்கி வரும் சலார் திரைப்படத்தில் வில்லனாக பிரித்விராஜ் நடித்து வருகிறார். பிரபாஸ்,பிரித்விராஜ் ,ஸ்ருதிஹாசன் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது.

இந்நிலையில் நடிகர் பிரத்விராஜ், தனது சமூக வலைதள பக்கத்தில், “இறுதியில் சலார் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்தன. பல ஆண்டுகளாக நான் பணியாற்றிய பழமொழி படங்களிலும் எனது அனைத்து கதாபாத்திரங்களும் எனது சொந்த குரலை கொடுக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. என்னுடைய சில கதாபாத்திரங்களுக்கு நானே டப்பிங் பேசியிருக்கிறேன். ஆனால் என்னுடைய ஒரே கேரக்டருக்கு ஐந்து மொழிகளில் பேசுவது இதுவே முதல்முறை. மலையாளம் உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் சலார் படத்திற்காக டப்பிங் பேசியுள்ளேன். வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி தேவாவும் வரதாவும் உங்களை சந்திப்பார்கள்” என்று நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

MUST READ