Homeசெய்திகள்கட்டுரைதமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வரம்..... மகாகவி பாரதியின் பிறந்த தின சிறப்பு கட்டுரை!

தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வரம்….. மகாகவி பாரதியின் பிறந்த தின சிறப்பு கட்டுரை!

-

- Advertisement -

தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வரம்..... மகாகவி பாரதியின் சிறப்பு கட்டுரை!தமிழ் கவிதைகளிலும் உரைநடைகளிலும் புலமைமிக்க பாரதியாரின் 141 வது பிறந்த நாள் இன்று.

தமிழை தன் உயிரெனக் கொண்டு வாழ்க்கையை கவிதையாக தந்த நம் சுப்பிரமணிய பாரதியை பற்றி கூற இந்த ஒரு கட்டுரை போதாது என்றாலும் சில வரிகளின் மூலம் அவரையும் அவர் புகழையும் பெருமையையும் நினைவில் கொள்வோம்.

சுப்ரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட பாரதியார் 1882 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஐயருக்கும், இலக்குமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தவர்.தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வரம்..... மகாகவி பாரதியின் சிறப்பு கட்டுரை! இவர் எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர் என பன்முக பரிமாணங்கள் கொண்டவர். சுதந்திரத்திற்காக போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர். சுதந்திரப் போராட்டத்தின் போது பாரதியின் பாடல்கள் தான் சுதந்திர கனலாய் இருந்து மக்களை வீருகொண்டு எழச்செய்தது. மேலும் இவர் பெண் உரிமை, சாதி ஒழிப்பு, அடிமைத்தன ஒழிப்பு போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். தன் கவிதைகளின் மூலம் வீரத்தை விதைத்தவர். அதற்கு ரௌத்திரம் பழகு போன்ற கவிதைகளில் பாரதியார் எழுதிய ஒவ்வொரு எழுத்துக்களுமே சாட்சி. உலகிலேயே சிறந்த கவிஞர்களில் தலை சிறந்தவர் பாரதியார் தான்.தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வரம்..... மகாகவி பாரதியின் சிறப்பு கட்டுரை!

பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற அழகிய காவியங்களை படைத்துள்ளார் பாரதி.  தேசிய கவி, மகாகவி, உலக கவி, தமிழ் கவி, விடுதலை கவி, முண்டாசு கவி, தமிழ் தாய் பெற்றெடுத்த பெருங்கவிஞன், பாட்டுக்கு ஓர் புலவன் என்ற ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தமாய் விளங்கியவர். முதன் முதலில் பத்திரிகைகளில் தமிழை பயன்படுத்தியவரும் இவர் தான். தமிழில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். தனது 7 வயதிலேயே பாடல் எழுதத் தொடங்கிய இவர் 11 வயதில் பாரதி எனும் பட்டத்தை பெற்று சுப்பிரமணிய பாரதி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வரம்..... மகாகவி பாரதியின் சிறப்பு கட்டுரை!

இவ்வாறு தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த பாரதியாரை மண்ணுள்ள வரை மறையாத மகா கவிஞனாக மக்கள் இன்று வரை போற்றி வருகின்றனர். மகாகவி பாரதி மறைந்தாலும் அவரின் கவிதைகள் என்றும் அவர் நினைவை நம்மில் ஊட்டி கொண்டே இருக்கின்றது.’தனிமை இறக்கம்’ முதல் ‘பாரத சமுதாயம் வாழ்கவே வரை’  எண்ணற்ற பல பாடல்களை பாடியுள்ளார். கருப்பு கோட்டும் தலைப்பாகையும் சுப்ரமணிய பாரதியின் அடையாளமாக திகழ்ந்தது. அதுவே இன்று தமிழின் அடையாளமாகவும் திகழ்கிறது.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம், பிரெஞ்சு, வங்காளம் போன்ற மொழிகளிலும் புலமை பெற்றவர். இத்தனை மொழிகளில் திறமை பெற்றவராக இருந்தாலும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று தமிழின் சிறப்பை உரக்கச் சொன்னார். தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வரம்..... மகாகவி பாரதியின் சிறப்பு கட்டுரை!

“செந்தமிழ் நாடெனும் போதினிலே –
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என்ற பாரதியாரின் பாடல் வரிகள் தமிழர்களின் மனதில் நீங்காத கீதமாய் நிலைத்து நிற்கிறது.தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வரம்..... மகாகவி பாரதியின் பிறந்த தின சிறப்பு கட்டுரை!குறிப்பாக பாரதியார் எழுதிய ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடல் இன்று வரையிலும் பலருக்கும் பிடித்தமான மனம் உருகும் பாடலாக இருக்கிறது.

இவ்வாறு தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாகவும், பூமிக்கு கிடைத்த வரமாகவும் தமிழை நேசித்து வாழ்ந்து மறைந்தார் நம் சுப்ரமணிய பாரதி. காலங்கள் கடந்தாலும் தமிழின் பெருமையாய் என்றும் நிலைத்து நிற்கும் நம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினமான இன்று அவரை நினைத்து, போற்றி,  புகழ்ந்து, வணங்குவோம்.

MUST READ