நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் போலா சங்கர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் தனது அடுத்த படத்தில் விட்டதை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் நடிகர் சிரஞ்சீவி. சிரஞ்சீவி நடிக்கும் 156 வது படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை பிம்பிசாரா படத்தின் இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது நடிகை திரிஷா நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை படத்தின் இயக்குனர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். ஃபேண்டஸி கதைகள் உருவாகி வரும் மெகா 156 படத்திற்கு விஸ்வம்பரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை திரிஷா ஏற்கனவே வெளியான ஸ்டாலின் திரைப்படத்தில் நடித்திருந்தார் . அதுமட்டுமில்லாமல் ப்ரோ டாடி படத்தின் ரீமேக்கிலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் வெளியான லியோ படத்திலும், தி ரோட் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.