நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா கமிட்டாகி இருந்தார். அதற்கான காளைகளை அடக்கும் பயிற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதால் வாடிவாசல் திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் வாடிவாசல் திரைப்படத்தை அடுத்த ஆண்டு முதல் பாதியில் தொடங்க படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சூர்யாவிற்கு ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்துள்ளது. இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஹாலிவுட்டில் சூர்யா நடிப்பதால் சின்ன சிக்கல் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால் ஹாலிவுட் படத்தில் கமிட்டாகிவிட்டால் இடையில் வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாது. அதாவது கெட்டப் சேஞ்ச் பண்ண முடியாது.
அதனால் நடிகர் சூர்யா வெற்றிமாறனிடம் வாடிவாசல் திரைப்படத்தை அதற்கு முன்பாக இயக்க வேண்டும் என கூறி இருக்கிறார். ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தில் பிசியாக இருப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வாடிவாசல் படத்தை தொடங்கலாம். பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தலாம். அதன் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளாராம். அந்த பத்து நாட்களும் அமீர் மற்றும் சூர்யாவின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக சூர்யாவிற்கு மாற்றுக் கருத்து ஏதேனும் இருப்பின் மார்ச் மாதத்தில் வாடிவாசல் படம் தொடங்கப்படாது எனவும் ஹாலிவுட் படத்திற்குப் பிறகு சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.