Homeசெய்திகள்சினிமாசூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் வெளியான கவினின் 'ஸ்டார்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் வெளியான கவினின் ‘ஸ்டார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!

-

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் வெளியான கவினின் ஸ்டார் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். அடுத்தடுத்து சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதேசமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதற்கிடையில் பீட்சா போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதைத்தொடர்ந்து நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பெயர் பெற்றார். இந்நிலையில் தான் நடப்பாண்டில் வெளியான டாடா திரைப்படம் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மாபெரும் வெற்றி பெற்ற டாடா படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார் கவின். அந்த வகையில் கவினுக்கு பல பட வாய்ப்புகள் தேடி வர, அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறார். இந்நிலையில் பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கி வரும் ஸ்டார் படத்தில் ஹீரோவாக நடிகர் கவின் நடித்து வருகிறார். இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சமீபத்தில் ஸ்டார் படத்தின் போட்டோ ஆல்பம் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது காலேஜ் சூப்பர் ஸ்டார் என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா பாடி உள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ