சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 இல் வெளியான திரைப்படம் இந்தியன். கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சங்கர் , இந்தியன் 2 திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால் ,சித்தார்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா காலகட்டத்திற்கு முன்பாகவே தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு கொரோனா போன்ற காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பாக முற்றிலும் நிறைவடைந்தது. மேலும் சமீபத்தில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் , இந்தியன் 3 படத்தை இயக்குவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் இப்போது சில காட்சிகள் தயாராக இருப்பதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதன்படி இந்தியன் 3 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அவர் பேட்டை என்னும் ஊரில் நடைபெற்று வருகிறதாம். அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்த சங்கர் திட்டமிட்டுள்ளாராம். அதுமட்டுமில்லாமல் கமல் இல்லாத காட்சிகளை இயக்குனர் அறிவழகன் இயக்கி உள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடவும் இந்தியன் திரைப்படத்தை அடுத்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.