திருச்சியில் அமைச்சர் நேருவின் சகோதரர் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டிருப்பது, புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, நான்கு பேரை கைது செய்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி… வைரலாகும் புகைப்படங்கள்!
அமைச்சர் நேருவின் சகோதரரான ராமஜெயம், கடந்த 2012- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21- ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை குற்றவாளிகளைக் கண்டறிய முடியவில்லை. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி சிறப்பு புலனாய்வு குழுவினர், சில ரவுடிகளிடம் உண்மைக் கண்டறியும் சோதனையை நடத்தினர்.
இந்த நிலையில், ராமஜெயம் கொலையின் போது, பயன்படுத்தப்பட்ட வெர்ஷா வகை காரை, ஆம்புலன்ஸ் தொழில் ஈடுபட்டு வந்த பிரபாகரன் என்பவர் விற்பனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, ஏற்கனவே சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தியிருந்தனர்.
மேலும், நாளை (டிச.13) மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவினர், அவரிடம் கூறியதாகத் தெரிகிறது. இந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனை அருகே பிரபாகரனை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், அவரை வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றது.
அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா!
ஏற்கனவே, இடப்பிரச்சனை தொடர்பான வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரன், காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட்டு வந்திருக்கிறார். மேலும், ராமஜெயம் கொலை வழக்கிலும் அவர் ஆஜராகி இருந்த சூழலில், திடீரென கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரபாகரனின் கொலை தொடர்பாக, நான்கு பேரை கைது செய்திருக்கும் காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஒருவரைத் தேடி வருகின்றனர்.