உடைமைகள், ஆவணங்கள் மட்டுமின்றி பல மாணவர்களின் புத்தகங்களையும் மிச்சம் வைக்காமல் சுருட்டி எடுத்துச் சென்றுவிட்டது மிக்ஜாம் புயல்.
பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் அப்டேட்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேற்று (டிச.12) தான் பாடப் புத்தகங்களே வழங்கப்பட்டன. இந்த சூழலில், தமிழகம் முழுவதும் இன்று (டிச.13) முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்குகிறது. பேரிடரையே சந்தித்துவிட்டோம். தேர்வை எதிர்க்கொள்ள மாட்டோமா என மனம் தளராமல் பல மாணவர்கள் இன்று (டிச.13) பள்ளி செல்கின்றனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு தொடங்குகிறது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு, அந்தந்த பள்ளிகளுக்கு இணையம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!
வரும் டிசம்பர் 22- ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகங்களில் தண்ணீர் சூழ்ந்தது. குடியிருப்புகளில் மழைநீர் உட்புகுந்ததால், மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் நனைந்தன. இதனால் மாணவ, மாணவர்களின் நலன் கருதி அரையாண்டுத் தேர்வை இன்றைக்கு தள்ளி வைத்தது தமிழக அரசு.