சென்னை கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் கலந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்துள்ளார்.
‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!
இது குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இந்நிகழ்வு டிசம்பர் 07- ஆம் தேதி அன்று சென்னை மாவட்டத்தில் ஒரு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கழிவுகளை அகற்றும் பணி டிசம்பர் 11- ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டுள்ளது. எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க (Boomer) தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் அப்டேட்!
இதுவரையிலும், திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை. டிசம்பர் 12- ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்ட நீர்நிலை பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.