Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

-

 

வரும் டிசம்பர் 19- ஆம் தேதி தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வரும் டிசம்பர் 19- ஆம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. வரும் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்கனமழைக்கு வாய்ப்புள்ளது.

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் அப்டேட்!

சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியஸ் ஆக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ