Homeசெய்திகள்சினிமா12 நாளில் ரூ.757 கோடி வசூல்... அனிமல் அசாத்திய சாதனை...

12 நாளில் ரூ.757 கோடி வசூல்… அனிமல் அசாத்திய சாதனை…

-

- Advertisement -
அனிமல் திரைப்படம் வெளியான 12 நாட்களில் 757 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் அனிமல் திரைப்படம் திரைக்கு வந்து 12 நாட்களில் 757 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

பான் இந்தியா ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியுள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனில் கபூர் மற்றும் ரன்பீர் கபூர் தந்தை – மகனாக நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்தி டிசம்பர் 1-ம் தேதி வெளியானது. படம் வசூலில் கலக்கினாலும், எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

படத்தில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகள் எதிர்மறை விமர்சனம் கலந்த பாராட்டை பெற்று வரும் நிலையில் இந்த வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ’அனிமல்’திரைப்படம். படம் வசூல் வேட்டையில் தொடர்ந்து சாதனை படைத்து வருவது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்திரைப்படம் இதுவரை 747 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

MUST READ