Homeசெய்திகள்சினிமாவிடாமுயற்சி படத்தில் தெறிக்கும் லுக்கில் ஆக்‌ஷன் கிங்... புகைப்படம் வைரல்...

விடாமுயற்சி படத்தில் தெறிக்கும் லுக்கில் ஆக்‌ஷன் கிங்… புகைப்படம் வைரல்…

-

விடாமுயற்சி திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது அவர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. அனிருத் விடாமுயற்சி படத்திற்கு இசை அமைக்கிறார். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், இவர் ஏற்கனவே அஜித்தின் வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த செய்திகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், மிகவும் தாமதமாக படப்பிடிப்பு பணிகள் அஜர்பைஜானில் தொடங்கினர்.
இதற்காக, விடாமுயற்சி பட குழுவினர் அஜர்பைஜான் சென்றனர். அங்கு மூன்று மாதங்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ரெஜினா, ஹுமா குரேசி, ஆரவ், அர்ஜூன், சஞ்சய்தத் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் புதிய கெட்டப் வெளியாகியுள்ளது. இந்த தோற்றத்தில் தான் அர்ஜூன் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ