Homeசெய்திகள்சினிமாவெள்ள நிவாரண பணிகளுக்காக நிதி உதவி வழங்கிய விஷ்ணு விஷால்!

வெள்ள நிவாரண பணிகளுக்காக நிதி உதவி வழங்கிய விஷ்ணு விஷால்!

-

- Advertisement -

வெள்ள நிவாரண பணிகளுக்காக நிதி உதவி வழங்கிய விஷ்ணு விஷால்!நடிகர் விஷ்ணு விஷால் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜீவ்காந்தி இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சென்னை வாழ் மக்கள் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரைப்பட பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதன்படி சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், KPY பாலா, பார்த்திபன், ஆதி, ஹரிஷ் கல்யாண், கமல், விஜய் என பலரும் உதவி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் வெள்ள நிவாரண பணிகளுக்காக 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

இதுகுறித்து நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கன மழையை தொடர்ந்து தமிழக அரசு நிவாரண பணிகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசின் வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சகோதரர் விஷ்ணு விஷால் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை நம்மிடம் வழங்கியுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.வெள்ள நிவாரண பணிகளுக்காக நிதி உதவி வழங்கிய விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷாலும் லட்சக்கணக்கான மக்களுடன் வெள்ளத்தில் சிக்கி மீட்பு படையினரால் படகின் மூலம் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ