Homeசெய்திகள்சினிமாயோகி பாபு நடிக்கும் 'போட்' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு!

யோகி பாபு நடிக்கும் ‘போட்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு!

-

யோகி பாபு நடிக்கும் 'போட்' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு!நகைச்சுவை நடிகரான யோகி பாபு தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ரஜினி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் மண்டேலா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல்வேறு பட வாய்ப்புகள் யோகி பாபுவை தேடி வரும் நிலையில்,கதாநாயகனாகவும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் வானவன்,மேகி போன்ற படங்களிலும் சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

கடைசியாக யோகி பாபு நடிப்பில் லக்கி மேன், குய்கோ போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.யோகி பாபு நடிக்கும் 'போட்' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு!

இதற்கிடையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களின் மூலம் பிரபலமான இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் போட் எனும் திரைப்படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இதில் யோகி பாபு உடன் கௌரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாலி & மான்வி மூவி
மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிப்ரானின் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக படத்தின் டைட்டில் வெளியானது.

அதைத் தொடர்ந்து போட் படத்தின் டீசரை வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி துபாயில் மிக பிரம்மாண்டமாக வெளியிட இருப்பதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ