
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது இந்திய கிரிக்கெட் அணி.
வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்கள்
தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையேயான முதல் டி20 போட்டி, மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியிலும் மழையால் திருப்பம் ஏற்பட்டிருந்தது. தற்போது, மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் போட்டியில் வெற்றி பெற்று, டி20 தொடரை சமன் செய்திருக்கிறது இந்திய அணி.
ஜோகனஸ்பர்க்கில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று முதலில் பந்து வீச்சைத் தேர்வுச் செய்து விளையாடியது. அதைத் தொடர்ந்து, விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்களையும், ஜெய்ஷ்வால் 60 ரன்களையும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஆவடியில் ரூ.10.4 கோடியில் கால்வாய் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு. நாசர் தொடங்கி வைத்தார்
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது இந்திய அணி.