Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் முதல் வடிவேலு வரை... உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்...

சிவகார்த்திகேயன் முதல் வடிவேலு வரை… உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்…

-

மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வடிவேலு வழங்கினார்.

மிக்ஜாம் புயல் சென்னை நகரையே புரட்டிப் போட்டது. புயலால் ஏற்பட்ட கனமழையும், பெரு வெள்ளமும் சென்னையை மூழ்கடித்து விட்டது. மழை நின்றபோதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அவர்களுக்கு பெரும்பாலான திரைப்பட பிரபலங்கள் உதவி வருகின்றனர். அதன்படி சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கி இந்த பணியை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஹரிஸ் கல்யாண் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். தொடர்ந்து ஜிவி பிரகாஷ், விஜய் டிவி புகழ், வைரமுத்து ஆகியோர் தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர்.
இதைத் தொடர்ந்து பார்த்திபன், ஆதி நிக்கி தம்பதி ஆகியோர் உணவு வழங்கியும், நிவாணப் பொருட்கள் வழங்கியும் உதவி செய்தனர். மேலும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் தங்கள் கட்சி நிர்வாகத்தினர் மூலம் மக்களுக்கு உதவி வருகின்றனர். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர். இதையடுத்து, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் சூரி ஆகியோரும் முதலமைச்சரின் பொது நிவாரணத்திற்கு நிதியுதவி வழங்கினர்.

இந்நிலையில், நடிகர் வடிவேலு 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். அண்மையில் வெளியான மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினும், வடிவேலுவும் இணைந்து நடித்திருந்தனர். உதயநிதிக்கு அப்பாவாக வடிவேலு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ