ஓஎம்ஆர் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

 

தத்தளிக்கும் தலைநகரம்... ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

ஓஎம்ஆர் சாலையில் நாளை (டிச.16) முதல் செயல்படுத்தப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அந்த அறிவிப்பில், “சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படுகின்றன.

காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ் காந்தி சாலையில்) திருப்பிவிடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் பதிய யூ டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்- அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

இதேபோல், கார்ப்பரேஷன் சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய “U” திருப்பத்தில் சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement