Homeசெய்திகள்தமிழ்நாடுலாரி- பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து- 2 பேர் உயிரிழப்பு!

லாரி- பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து- 2 பேர் உயிரிழப்பு!

-

 

லாரி- பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து- 2 பேர் உயிரிழப்பு!
Video Crop Image

கண்டெய்னர் லாரியும்- தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைவு!

சென்னையில் இருந்து பயணிகளுடன் அறந்தாங்கிக்கு தனியார் ஆம்னி பேருந்துச் சென்றுக் கொண்டிருந்தது. இன்று (டிச.16) அதிகாலை 05.00 மணியளவில் அந்த பேருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றுக் கொண்டிருந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு, எதிர்திசையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு இரும்பு தகடுகளை ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது.

இந்த கோர விபத்தில், பேருந்து மற்றும் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20- க்கும் மேற்பட்ட பயணிகள், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர்செய்ததுடன், உயிரிழந்த ஓட்டுநர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

“வளர்ச்சிக்கு எதிரான கைப்பாவையாக ஆளுநர் இருக்கக் கூடாது”- பிரபல ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக் காரணமாக, உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

MUST READ