Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

-

ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!ஆளி விதைகளில் இரு வகைகள் உண்டு. ஒன்று மஞ்சள் நிறத்தில் இருக்கும் மற்றொன்று காவி நிறத்தில் இருக்கும். காவி நிறத்தில் உள்ள ஆளையும் மஞ்சள் நிறத்தில் உள்ள ஆளையும் ஒத்த ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. ஆளி என்பது ஆயிரம் ஆண்டுகளாக உணவுப் பொருளாக இருந்து வந்தாலும் தற்போதுள்ள காலகட்டத்தில் ஒரு உள்ளடங்கு பொருளாக தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆளி விதையில் புரதச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆளி விதையில் அதிகப்படியான நார் சத்துக்கள் இருக்கின்றன. இதனால் இவை மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது.

ஆளி விதையின் எண்ணெய், சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

ஆளி விதைகளை அதிகமாக உட்கொள்வதினால் வயிறு மற்றும் குடல் பிரச்சனைகள் சரியாகும்.

ஆளிவிதையானது சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் பாதுகாக்கிறது.

மேலும் மார்பக புற்றுநோய் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படும் திறன் இந்த ஆளி விதைக்கு உள்ளது.ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

ஆளி விதைகளை இரவில் ஊற வைத்து சுண்டல் போல தாளித்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலமடையும். இதனால் மூளையின் சக்தி அதிகரிக்கும்.

இம்முறைகளை எல்லாம் ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

மேலும் ஆளி விதைகளை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்.

MUST READ