Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்திருநீற்றுப் பச்சிலையில் இவ்வளவு பயன்களா?

திருநீற்றுப் பச்சிலையில் இவ்வளவு பயன்களா?

-

- Advertisement -

திருநீற்றுப் பச்சிலையில் இவ்வளவு மருத்துவ பயன்களா?சிறந்த மூலிகை வகைகளில் திருநீற்றுப் பச்சிலையும் ஒன்று. திருநீற்றுப் பச்சிலையின் செடியில் உள்ள இலைகள் மிகுந்த மணம் உடையவை. மலைப்பிரதேசங்களில் அதிகம் வளரும் இந்த செடிகளை தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் வளர்க்கப்படுகிறது.

நறுமணம் வீசும் இதன் இலைகளை பறித்து அரைத்து உடம்பில் தேய்த்து வந்தால் கட்டிகள் கரையும். இதன் இலைகளை நுகர்ந்து பார்த்தால் தீரா தலைவலி குறையும். மேலும் இதயம் நடுக்கம், தூக்கம் இன்மை போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.

திருநீற்றுப் பச்சிலையின் இலைகளை பறித்து அதன் சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர இருமல் மற்றும் வயிற்று வாயு பிரச்சனைகள் குணமடையும்.

தேள் கடித்த இடத்தில் திருநீற்றுப் பச்சிலை இலைகளை கசக்கி பூசினால் வலி குறையும்.

திருநீற்றுப் பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக்கள் மறையும்.

திருநீற்றுப் பச்சிலை விதையை சப்ஜா விதைகள் எனவும் அழைப்பார்கள். இல்ல சப்ஜா விதைகளை சர்ப்பத்தில் கலந்து குடித்து வர வாந்தி, பேதி போன்றவை குணமடைவதுடன் உடல் சூடும் தணியும்.திருநீற்றுப் பச்சிலையில் இவ்வளவு மருத்துவ பயன்களா?

5 கிராம் அளவு சப்ஜா விதைகளை எடுத்து, 100 மில்லி லிட்டர் குடிநீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து குடித்து வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்றுக் கடுப்பு, நீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு ஏதேனும் ஒவ்வாமை ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ