லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பாக பூஜையுடன் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தளபதி 68 படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த வகையில் தளபதி 68 படம் குறித்த அடுத்த தகவல்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று செய்திகள் கசிந்திருந்தது. அதன்படி டிசம்பர் 31 மாலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் புதிய போஸ்டரையும், புத்தாண்டு தினத்தன்று மாலையில் மற்றொரு புதிய போஸ்டரையும் வெளியிடப்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் தளபதி 68 படத்தின் டைட்டில் பான் இந்திய அளவில் ரீச் ஆகும் படியாக இருக்க வேண்டும் என வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளாராம். அதனால் லியோ படத்தைப் போல ஆங்கிலத்தில் செம மாஸான டைட்டில் வைக்கப் போவதாக கூறப்படுகிறது. எனவே டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.