தமிழில் வெப்பம், நான் ஈ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் நானி. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தமிழில் கடைசியாக நடித்திருந்த திரைப்படம் தசரா. இப்படத்தை தொடர்ந்து நானே தனது முப்பதாவது படமான ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாணிக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். இயக்குனர் சௌர்யுவ் இதனை இயக்கியுள்ளார். அப்பா – மகள் பாசப்பிணைப்பை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இந்தப் படத்தை வைரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ஹேசம் அப்துல்லா இசையமைத்துள்ளார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் வெளியான முதல் நாளில் 11 கோடி வரை வசூல் செய்தது அதை தொடர்ந்து தற்போது வரை உலக அளவில் 45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நல்ல ஒரு பீல் குட் படமாக வெளியான இந்த படம் தற்போது வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நானி மற்றும் பட குழுவினர்கள் ஹாய் நான்னா படத்தின் வெற்றியை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று இப்படத்தில் வெற்றி விழா நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் BOOK MY SHOW இல் மட்டுமே ஒரு மில்லியனுக்கும் மேலான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளனர். இந்த வெற்றி விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.