Homeசெய்திகள்சினிமாபிறந்தநாள் கொண்டாடும் திரை நட்சத்திரங்கள்... பிரபலங்கள் வாழ்த்து..

பிறந்தநாள் கொண்டாடும் திரை நட்சத்திரங்கள்… பிரபலங்கள் வாழ்த்து..

-

- Advertisement -
நடிகை தமன்னா மற்றும் ஆண்ட்ரியா ஆகிய இரு முன்னணி நட்சத்திரங்களும் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் திரை உலகில் முன்னனி நடிகைகளாக வலம் வருபவர்கள் தமன்னா மற்றும் ஆண்ட்ரியா. இருவரும் ஒரே நாளில் பிறந்தது மட்டுமன்றி ஒரே வருடத்தில் சினிமாவுக்கு அறிமுகமும் ஆகினர் என்பது தான் ஆச்சரியம். பிறந்தது மட்டுமன்றி திரைப் பயணத்தையும் இருவரும் சேர்ந்தே தொடங்கி இருக்கின்றனர். தமன்னா சண்ட் சா ரோஷன் செஹ்ரா என்ற படம் மூலம் நாயகியாக திரை உலகிற்கு அறிமுகமானார். தமிழில் கேடி படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார். அதே பாணியில் கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சிறிய ரோல் நடித்து ஆண்ட்ரியா அறிமுகமானார். தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நாயகியாக அவரின் சினிமா பயணம் தொடங்கியது.

நடிகை மட்டுமன்றி சிறந்த பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. தமன்னா நடிகை மட்டுமன்றி ஒரு நகை வடிவமைப்பாளர். தனக்கென தனி தளம் அமைத்துள்ளதோடு, தனக்கான நகைகளை தானே வடிவமைத்துக் கொள்ளும் திறன் கொண்டவர். நடிப்பைத் தாண்டி ஆண்ட்ரியாவும் சரி, தமன்னாவும் சரி நல்ல மாடல்களும் கூட. இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளனர். தெலுங்கில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்த தடகா என்ற படத்தில் இருவரும் நடித்து இருக்கின்றனர். இது தமிழில் ஆர்யா மற்றும் மாதவன் நடித்த வேட்டை திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

இந்நிலையில் தமன்னா, ஆண்ட்ரியா இருவரும் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகின்றனர். இதனால், திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர்கள் இருவருக்கும் சமூக வலைதளங்களில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ