Homeசெய்திகள்சினிமாஅமீர் நடிக்கும் 'மாயவலை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அமீர் நடிக்கும் ‘மாயவலை’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

அமீர் நடிக்கும் 'மாயவலை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!பிரபல இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே ,ராம், பருத்திவீரன் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர். அது மட்டும் இல்லாமல் அமீர் பல படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 2009இல் வெளியான யோகி திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றார். வெற்றிமாறனின் வடசென்னை திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் வெற்றி மாறன் இயக்க உள்ள வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இவ்வாறு பிசியாக நடித்து வரும் அமீர், நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக மாயவலை என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் அமீருடன் இணைந்து ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா செட்டி, தீனா, சரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அமிரே தயாரித்து நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைத்துள்ளார். இப்படமானது 2023 டிசம்பரில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பருத்திவீரன் விவகாரம் தொடர்பாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தை 2024 பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமீர் நடிக்கும் 'மாயவலை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

MUST READ