Homeசெய்திகள்சினிமாகார்த்தி, பிரேம் குமார் கூட்டணியில் உருவாகும் கார்த்தி 27.... லேட்டஸ்ட் அப்டேட்!

கார்த்தி, பிரேம் குமார் கூட்டணியில் உருவாகும் கார்த்தி 27…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

கார்த்தி, பிரேம் குமார் கூட்டணியில் உருவாகும் கார்த்தி 27.... லேட்டஸ்ட் அப்டேட்!நடிகர் கார்த்தி கடைசியாக நடிக்க முடித்த திரைப்படம் ஜப்பான். ராஜுமுருகன் இயக்கியிருந்த இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

அதைத் தொடர்ந்து கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி 26 திரைப்படத்திலும், 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி 27 திரைப்படத்திலும் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார்.
கார்த்தி 27 திரைப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் வில்லனே இல்லை என்றும் சூழ்நிலைதான் வில்லனாக மாறுகிறது என்றும் செய்திகள் பரவி வந்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 தொடரில் கதாநாயகியாக நடித்திருந்த சுவாதி கொண்டே கார்த்தி 27 படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்களுக்கு முன்பாக கும்பகோணத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.கார்த்தி, பிரேம் குமார் கூட்டணியில் உருவாகும் கார்த்தி 27.... லேட்டஸ்ட் அப்டேட்!

இந்நிலையில் கார்த்திக் 27 திரைப்படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது கார்த்தி 27 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் குறித்த அப்டேட் இறைவன் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ