Homeசெய்திகள்இந்தியாகோதுமை, ஆட்டா, அரிசி தட்டுப்பாடின்றியும் விலை உயராமலும் இருக்க ஏற்பாடு!

கோதுமை, ஆட்டா, அரிசி தட்டுப்பாடின்றியும் விலை உயராமலும் இருக்க ஏற்பாடு!

-

 

கோதுமை, ஆட்டா, அரிசி தட்டுப்பாடின்றியும் விலை உயராமலும் இருக்க ஏற்பாடு!

சில்லறை விற்பனையில் விலை உயர்வைத் தடுக்கும் நோக்கில், சுமார் 3.5 லட்சம் டன் கோதுமை மற்றும் 13,000 டன் அரிசியை மத்திய அரசு வெளிச்சந்தையில் ஏலம் மூலம் விடுவித்திருக்கிறது.

நெல்லையில் ஜன.1- ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மின்னணு ஏலம் மூலம் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் இருந்து உபரி கையிருப்பு கோதுமை மற்றும் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் மொத்தம் 101 லட்சம் டன் கோதுமையை மின்னணு ஏலத்தில் விடுவிக்க அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, 26- வது ஏலம் கடந்த டிசம்பர் 20- ஆம் தேதி நடைபெற்றது. வெளிச்சந்தையில் உபரி தானியங்களை குறிப்பிட்ட இடைவெளியில் விற்பனை செய்வதன் மூலம் சில்லறை விற்பனையில் கோதுமை, ஆட்டா மற்றும் அரிசி ஆகியவைத் தட்டுப்பாடின்றியும், விலை உயராமலும் கிடைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

‘வைகுண்ட ஏகாதசி’- ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில் நின்றுச் செல்லும்!

அடுத்தாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உணவுத் தானியங்களின் விலை உயர்வைப் பராமரிப்பதில் அரசுத் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

MUST READ