ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாளையொட்டி, அமைச்சர் ரோஜா கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு, மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கு சென்று பரிசுப் பொருட்களை வழங்கினார்.
சாண்டா கிளாஸாக சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா… மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி…
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள பாம்பே காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். மாற்றுத்திறனாளியான இவர், காலணிகளை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகிறார். இவரது மனைவிக்கு அண்மையில் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு, படுக்கை படுக்கையாக உள்ளார்.
இதனால் நாகராஜ் வீட்டு பணிகளைச் செய்துவிட்டு, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, காலணிகளை விற்பனை செய்ய கிளம்புவார். இதையறிந்த ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா, அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாளையொட்டி, நாகராஜுக்கு இன்ப அதிர்ச்சிக்கு கொடுத்துள்ளார். அதாவது, கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடமணிந்த அமைச்சர் ரோஜா, அவரது வீட்டிற்கு சென்று குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி வியப்பில் ஆழ்த்தினார்.
டன்கி திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
வந்தது அமைச்சர் ரோஜா என்பதை அறியாமல், நாகராஜ் முதலில் தனது வேலையைச் செய்த நிலையில், பின்னர் அவரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து நாகராஜிடம் அவரது தொழிலை மேம்படுத்துவதற்காக, ரூபாய் 2 லட்சம் நிதி வழங்கி, பரிசுகளை வழங்கினார்.
இது தொடர்பான வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.