Homeசெய்திகள்தமிழ்நாடுஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

-

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 29- ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒருசில இடங்களில் லேசான மழைப் பெய்யக்கூடும்.

“சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை”- இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு இன்று (டிச.23) மீனவர்கள் செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தப்படுகிறது.

MUST READ